Saturday, May 1, 2010
குஷ்பு மீதான வழக்குகள்
திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று அவர் கூறியிருந்தார்.
படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை என்றும் குஷ்பு கருத்து வெளியிட்டிருந்தார்
2005 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த இந்த கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது 22 வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து குஷ்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
சென்னை உயர்நீத்மன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் குஷ்பு மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கில் தீர்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குஷ்புவின் மனுவை ஏற்று, இது தொடர்பாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து இன்று(புதன்கிழமை) உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment