தற்காப்புக் கலை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் எதிர்பாராத தர்மசங்கடத்துக்கு ஆளானார். நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அரங்கில் தனது திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்த அவரின் காற்சட்டை திடீரென கழன்று விழுந்து விட்டது. இந்தக் காட்சியை அக்குவேறாக ஆணிவேறாக படம் பிடித்தும் விட்டனர். கீனன் ஸ்டோன் என்பவருக்குத்தான் இந்த அனுபவம் ஏற்பட்டது. வர்ஜீனியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர் சீன தற்காப்புக் கலையான வுஷூவில் கறுப்புப் பட்டிப் பெறுவதற்கான தகுதி காண் நிகழ்வின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கலிபோர்னியாவில் உள்ள ஒரு அரங்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவர் மிகச் சிறப்பான முறையில் தனது திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். நடுவர்களும் மெய்மறந்து இவரின் ஆற்றலை இரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சற்று நேரத்தில் தனது கால்சட்டைப் பட்டி கழருவதை இவர் உணர்ந்தார். எதுவும் செய்ய முடியவில்லை. மெல்ல மெல்லக் கழன்று அப்படியே நழுவி விழுந்து விட்டது. இறுதியில் மொத்தப் பத்துப் புள்ளிகளில் இவருக்கு 7.7 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஆண்டு காற்சட்டையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு மீண்டும் போட்டியிடப் போவதாக இவர் தெரிவித்துள்ளார். Share 0
Wednesday, March 23, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment