-: பச்சை வெஜ் குருமா |
பச்சை வெஜ் குருமா | arusuvai - Food and Health information in Tamil
தேவையானப் பொருட்கள்
வேக வைக்க:
உருளை - ஒன்று
கேரட் - பாதி
கருணைக்கிழங்கு - ஒரு சிறிய துண்டு
காலிஃப்ளவர் - ஆறு பூக்கள்
பட்டாணி - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
அரைக்க - 1:
பட்டை - ஒரு சிறுத் துண்டு
கிராம்பு - ஒன்று
தனியா - கால் தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறுத்துண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி - கால் கட்டு
பூண்டு - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி முழுவதும்
அரைக்க - 2:
முந்திரி - நான்கு
வறுத்த வேர்கடலை - நான்கு
வெள்ளை எள் - கால் தேக்கரண்டி
கசகசா - கால் தேக்கரன்டி
சோம்பு - கால் தேக்கரன்டி
தாளிக்க:
பட்டர் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - சிறுத் துண்டு
கிராம்பு - ஒன்று
கறிவேப்பிலை - ஆறு இதழ்
காய்கறிகளை கழுவி விட்டு நறுக்கி வைக்கவும். அரைக்க கொடுத்துள்ள இரண்டையும் தனித்தனியாக அரைக்கவும். முதலில் பொடி செய்ய வேண்டிய பொருட்களை போட்டு அரைத்து விட்டு பின்னர் மற்ற பொருட்களை அரைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
அதன் பிறகு அரைக்க கொடுத்துள்ள முதல் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கிளறி விட்டு பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
இப்பொழுது வெந்த காய்கறிகளை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
கடைசியில் இரண்டாவதாக அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து சேர்த்து தீயின் அளவை மிதமாக வைத்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின்னர் இறக்கி விடவும்.
சுவையான பச்சை வெஜ் குருமா ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.
இதை ஆப்பம், சப்பாத்தி, இடியாப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment