
]சுத்திகரிப்பு சேவையில் நாய்கள்! பிரான்ஸில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் கூடிய விசேட சந்தை ஒன்றில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களாக இரு நாய்கள் பணி ஆற்றின.
இந்நாய்களுக்கு சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு உரிய ஆடைகள் அணிவிக்கப்பட்டன.
வண்டில்கள் கொடுக்கப்பட்டன. இவை இரு கால்களால் வண்டிகளை தள்ளிக் கொண்டன. குப்பைகளைப் பொறுக்கி வண்டிக்குள் போட்டன. மிகவும் வேகமாக பணி ஆற்றின.
[நாய்களின் இச்சுத்திகரிப்புப் பணி சந்தையில் நின்றவர்கள் அனைவருக்கும் வியப்பை கொடுத்தது. இச்சுத்திகரிப்பு பணியின்போது பிடிக்கப்பட்ட வீடியோக்கள் இணையத் தளங்களில் மிகவும் பிரபலம் அடைந்து உள்ளன.
No comments:
Post a Comment