Monday, March 28, 2011
மார்பு கட்ச்சை mattum
இது நியுஸிலாந்தின் ஒடாகோ மத்திய பகுதியில் காணப்படும் ஒரு இடம். கார்ட்ரோனா பிரா வேலி என்று தற்போது இந்த இடம் அழைக்கப்படுகின்றது.
1999ம் ஆண்டுக் கடைசியில் கிறிஸ்மஸுக்கும் புத்தாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில்தான் இங்கு பிராக்களைத் தொங்கவிடும் இந்தப் பழக்கம் ஆரமபமானது.
வீதி ஓரமாக அமைந்துள்ள இந்த நீளமான வேலியில் முதலில் நான்கு பிராக்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. 2000 மாம் ஆண்டு இறுதியில் இதன் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்தது.
அப்போது யாரோ ஒருவர் இவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.இந்த பிராக்கள் அப்புறப்படுத்தப்பட்டமை தெடர்பாக உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. உடனே மீண்டும் இங்கு பிராக்கள் வந்து குவிய ஆரம்பித்துவிட்டன.
யார் எதற்காக இங்கு முதன்முதலாக பிராவைத் தொங்கவிட்டார். இதன் நோக்கம் என்ன? என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் நாளுக்குநாள் வண்ண வண்ணமான விதவிதமான பிராக்கள் வந்து சேருகின்றன.
இங்குள்ள பிராக்களின் எண்ணிக்கை 2006ல் 800த் தாண்டியபோது அவற்றுள் சில அப்புறப் படுத்தப்படடன, ஆனால் மீண்டும் அதை விட பல மடங்கு மளமளவென்று வந்துத் தொங்க ஆரம்பித்துவிட்டன.
அன்றிலிருந்து யாரும் இஙகுள்ள பிராக்கள் எதையும் அகற்றவில்லை.இப்போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த இடம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு இடமாகவும் மாறிவிட்டது.இதனால் இந்த வழியாகச் செல்லும் சாரதிகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.Share 0
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment