Thursday, June 21, 2012

கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கான தாத்பரியம்

கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கான தாத்பரியம் என்ன? ஸ்வாமிக்கு சமர்ப்பித்த தேங்காயில் ஒரு மூடியை அர்ச்சகருக்குத் தரவேண்டுமா? எனில், இரண்டு மூடிகளில் எதைத் தருவது?


"தாவரங்கள் அவனது படைப்பு. ஓஷதிகளும் (அரிசி, கோதுமை போன்ற) பயிரினங்களும், தென்னை, மா, பலா போன்ற வனஸ்பதிகளும் மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் நோக்கத்தில் இறைவனால் படைக்கப்பட்டவை.

வனஸ்பதியைச் சார்ந்தது தேங்காய். அதை உட்கொள்ளும் தகுதி இருப்பதால், அதை அவருக்குப் படைத்து, அவரது திருப்பார்வை பட்டு சுத்தமான தேங்காயை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

இறைவனுக்கு அளிக்கும் அளவுக்குத் தூய்மை பெற்றது தேங்காய். இயற்கையாகவே வளர்ந்து நாம் உட்கொள்ளும் அளவுக்கு முழுமை பெற்ற பொருள் அது. அப்படி, கடவுளுக்குப் படைத்து அவரின் பார்வை பட்டுப் புனிதமாகும் பொருளை, தனக்கு மட்டுமே ஒதுக்கிக்கொள்ளாமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் எனும் நோக்கத்தில், கடவுளை வழிபடும் பெரியோருக்குப் பகிர்ந்தளிப்பது சிறப்பு.

கண் இல்லாத தேங்காய் மூடியை அர்ச்சகருக்கு அளித்து மகிழலாம்







No comments:

Post a Comment