Tuesday, May 8, 2012

கோடிகளைக் குவித்த கோபப் பறவைகள்! Angry Birds...

கோடிகளைக் குவித்த கோபப் பறவைகள்!



Angry Birds... ஆண்டிராய்ட் போன்கள் அறிமுகம்போது, அதன் விற்பனைக்கு முக்கியக் காரணமான இருந்த மொபைல் கேம்!

சிறைப்பட்டிருக்கும் சிறு பறவைகளை விடுவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட Angry Birds கேம்தான் முதலில் வ...ெளியிடப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை பச்சை நிறப் பன்றித் தலைகளை அடித்து வீழ்த்த வேண்டும் என்பதே விதிமுறை. இது, முந்தைய பாகத்தின் ரெக்கார்டை ஒரே நாளில் முறியடித்தது.

Angry Birds கேம் பாதிப்பில், ஆங்கிலத்தில் 'ரியோ' என்ற அனிமேஷன் படமும் வெளியிடப்பட்டது. இதுவும் ஹிட்.

இதனிடையே, Angry Birds Space புது வெர்ஷன் கேம் வெளியிடப்பட்டது. இதுவும் சூப்பர் ஹிட்!

தற்போது, ஆண்டிராய்டை தொடர்ந்து மைக்ரோசாப்ட், ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ், பிளாக் பெர்ரி மொபைல் போன், கூகுள் குரோம், பிளே ஸ்டேஷன் 3 வரை சிறகடித்துப் பறக்கிறது, Angry Birds.
சுட்டிகளை விட, பெரியவர்கள் தான் இந்த கேமை அதிகமாக விளையாடித் தீர்க்கிறார்கள்.


இதெல்லாம் இருக்கட்டும்... இந்த Angry Birds கேம், ஒரே ஆண்டில் 100 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியிருக்கிறது என்பதே அண்மைத் தகவல்!

No comments:

Post a Comment