Friday, May 6, 2011

அமெரிக்க விமானங்களை கடத்தி ஆசியாவில் தாக்குதல் நடத்த பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக விக்கி லீக் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமானங்களை கடத்தி ஆசியாவில் தாக்குதல் நடத்த பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக விக்கி லீக் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மற்றும் ராணுவ தலைமையகம்

மீது விமானங்களால் மோதி பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் பலர் உயிர் இழந்தனர். இதை தொடர்ந்து பின்லேடனை அமெரிக்கா வேட்டையாட தொடங்கியது.


ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் ஏமனை சேர்ந்த அப்தால்- மாலிக் அப்தால் வகாகப் உள்ளிட்ட 31 அல்கொய்தா தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். அவனிடம் நடத்திய விசாரணையில் அங்குள்ள தோரா போரா மலைப்பகுதியில் பின்லேடன் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அங்கு அமெரிக்க ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து பின்லேடன் தப்பி விட்டான். பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அப்தால்-மாலிக் உள்ளிட்ட 31 பேரும் அமெரிக்க உளவுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அதாவது அமெரிக்க பயணிகள் விமானத்தை கடத்தி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்களின் மீது மோத செய்து அழிவை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருந் தான். அமெரிக்க கட்டிடங்களில் விமானங்களை மோதி தாக்கியது போன்று இங்கும் நடத்த திட்டமிட்டிருந்தான். அதற்காக இவர்கள் அனை வரும் தற்கொலைப்படை தீவிரவாதிகளாக பயிற்சி பெற்று இருந்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பின்லேடனின் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது.


இந்த தகவல்கள் விக்கி லீக் இணைய தளம் வெளியிட்ட அமெரிக்க தூதரகங்களின் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோன்று பின்லேடனின் ஒரு மகன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாகிஸ்தானின் கராச்சி நகரில், கடந்த 2002-ம் ஆண்டு பாதுகாப்பாக தங்கியிருந்தான். அதற்காக அவனிடம் 20 பாஸ்போர்ட்டுக்கள் இருந்தன. இந்த தகவலையும் விக்கி லீக் இணைய தளம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment