Saturday, May 14, 2011

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் மின்னலில் தப்பிப் பிழைத்த விமானம்!

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த ஏர்பஸ் 380 ரக விமானம் திடீரென மின்னலில் சிக்கி அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்தது.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானியின் தலைக்குமேலால் பாய்ந்த மின்னல் விமானத்தின் உடல் பகுதியெங்கும் பரவியது.

இது அதி சக்தி மிக்க மின்சாரத்தையும் விமானத்தின் உடல் பகுதி முழுவதும் பாய்ச்சியுள்ளது.

துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான இந்த விமானம் இந்த ஆபத்தைக் கடந்து ஹீத்ரு விமான நிலையத்தில் பத்திரமாகத் தரை இறங்கியது.


இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது விமானத்தில் 500 பயணிகளும், விமான ஊழியர்களும் இருந்துள்ளனர்.

தென்மேற்கு லண்டனைச் சேர்ந்த கிறிஸ் டோஸன் என்ற படப்பிடிப்பாளர் இந்தக் காட்சியை அப்படியே படம் பிடித்துள்ளார்.

வானத்தில் மேகக் கூட்டம் அதிகரித்ததும் மின்னல் வெட்டும் காட்சியை இயல்பாகப் படம் பிடிப்பதற்காக தனது கமராவை தயார் நிலையில் வைத்திருந்தபோதே எதிர்பாராத விதமாக இந்தக் காட்சி அதில் சிக்கிக் கொண்டது.

உலகின் மிகப்பெரிய வர்த்தக சேவை விமானமான ஏர்பஸ் 380 இவ்வாறான மின்னல் தாக்குதலில் இருந்து தப்பியது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று விமானத் துறை நிபுணர்கள் சர்வ சாதாரணமாகக் கூறுகின்றனர்.

இவ்வாறான பாரிய மின்னலால் விமானம் தாக்கப்படுகின்ற போது, அதில் இருந்து பிறக்கும் மின்சாரத்தை கடத்தி செயல் இழக்கச் செய்யும் தன்மை இந்த விமானத்தின் உடல் பகுதிக்கு உள்ளது என்று அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இல்லையேல் இந்த விமானம் வெடித்துச் சிதறியிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.Share70

No comments:

Post a Comment